Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மானியம் இல்லாத எரிவாயு உருளைகளின் விலை ரூ.127 அதிகரித்து ரூ.877.50 ஆனது!

விண்ணைத் தொடும் உருளை விலை!
மானியம் இல்லாத எரிவாயு உருளைகளின் விலை ரூ.127 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் போன்று இனி மாதந்தோறும், சர்வதேச சந்தை நிலவரப்படி உருளையின் விலையையும் நிர்ணயிக்க முடிவு செய்திருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 

மத்திய அரசு வருடத்துக்கு 6 உருளைகளுக்கு மட்டுமே மானியம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளதால், இனி மானியம் இல்லாத எரிவாயு உருளை விலை சென்னையில் ரூ.877.50 ஆகவும், மும்பையில் ரூ.984 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னைய விலையிலுல் ரூ.127 அதிகமாகும். 

 தற்போது மார்ச் மாதம் வரை 3 உருளைகள் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும். எனவே அதிக சிலிண்டர்கள் தேவைப்படும் குடும்பத்தினர் ஒவ்வொரு உருளைக்கும் இனி ரூ.877.50 கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post