Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணுஉலைப் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள். வெளிநாட்டு தூதரகங்களில் மனு கையளிப்பு



இன்று ஏழு பேர் கொண்ட குழு ஒன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக புது டெல்லியில் உள்ள பல வெளிநாட்டு தூதரகத்தில் மனு ஒன்றை கையளித்தனர். இந்தக் குழுவில் அணு உலை எதிர்ப்பாளர்கள் கவிதா கிருஷ்ணன் , எழுத்தாளர் மாலதி மைத்திரி, தீபா, பார்கவி, சுந்தரம், ஜிதேந்தர், அணு உலைக்கு எதிரான மாணவர் இயக்கம் பாண்டி குமார் ஆகியோர்கள் இடம்பெற்றனர். இவர்கள் அனைவரும் முறையே ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா, பிரித்தானியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்வீடன், சீனா மற்றும் பிரான்ஸ் நாட்டு தூதரகங்களில் மனுவை கையளித்தனர். 

கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை மக்கள் கடந்த நானூறு நாட்களுக்கு மேலாக போராடி வருகிறார்கள் . போராட்டதையும், போராடும் மக்களையும் மதிக்காமல் அரசு அவர்களின் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதோடு  பல பொய் வழக்குகளையும் போட்டு வருகிறது , ஜனநாகய ரீதியான போராட்டத்திற்கு இது வரை அரசு மதிப்பளிக்கவில்லை . பேச்சு வார்த்தைக்கும் வரவில்லை. எந்த போராட்டத்திற்கும்  செவி சாய்க்கவில்லை. இதனால் இப்போராட்டத்திற்கு பிற நாடுகள்  தங்கள் ஆதரவை நல்க வேண்டும் என்ற கோரிக்கையை   வைத்தே இந்த மனு இந்த நாடுகளின் தூதரகங்களில் கொடுக்கப்பட்டது. அந்த நாடுகளின் தலைமை அமைச்சருக்கும், அதிபர்களுக்கும் இந்த மனுவை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.  இந்த மனுவை அனைத்து நாட்டு தூதரகங்களும் பெற்றுக் கொண்டன. 








கையளிக்கப்பட்ட மனு 





[vuukle-powerbar-top]

Recent Post