Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியா வந்தனர் இலங்கை எம்.பி., க்கள்: பிரதமருடன் சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை.....
இந்தியா வந்துள்ள இலங்கை எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து பேசினர். இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் 7 எம்.பி.க்கள், சம்பந்தன் தலை‌மையில் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை டில்லியில் சந்தித்து பேசினர். அப்போது இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போருக்கு பின்னர் உள்நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மறுகுடியேற்றம்,மறுவாழ்வு மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசினர். முன்னதாக இவர்கள் ‌வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
[vuukle-powerbar-top]

Recent Post