Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலக கோப்பை கிரிக்கெட்டில் மண்ணைக் கவ்விய இலங்கை: பிரிட்டன் வாழ் தமிழர்கள் கொண்டாட்டம்!

வெற்றி ஆரவாரத்தில் மேற்கு இந்திய தீவுகள்!
நேற்று கொழும்பில் நடைபெற்ற 20 - 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியடைந்தமையை அடுத்து பிரிட்டனில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற 20 - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணிகளிடம் பலத்த அடிவாங்கி சுருண்டு படுதோல்வி அடைந்த நிலையில் பிரிட்டனின் ஈஸ்ட்ஹாம், குறொய்டன், லூட்டன், ரூட்டிங், வெம்பிளி பகுதிகளில் கடைகளுக்கு முன் கூடிய சில தமிழ் இளைஞர்கள் இனிப்பு கொடுத்தும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர்.

இந்த காட்சியைக் கண்ட சில சிங்களவர்கள் இவர்களை முறைத்துப் பார்த்து சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post