Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சூடான் ஆயுதக் கிடங்கின் மீது தாக்குதல்: இஸ்ரேல் அரசின் கைவரிசையா?

தாக்குதலில் பற்றி எரியும் ஆயுதக் கிடங்கு!
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள கார்டோன் என்ற இடத்தில் ராணுவ ஆயுத கிடங்கு உள்ளது. இந்த ஆயுத கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில் 2 பேர் உயிர் இழந்தனர். 

விபத்திற்கான காரணம் தெரியாத போலும், சூடான் நாட்டு மந்திரி அகமத் பிலால் இஸ்மாயில் எங்கள் ஆயுதகிடங்கை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதனால்தான் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 4 இஸ்ரேல் போர் விமானங்கள் பறந்து வந்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எங்கள் ஆயுத கிடங்கை தாக்கின என்று அவர் கூறியுள்ளார். 

2009-ம் ஆண்டு செங்கடல் பகுதியில் சூடான் நாட்டின் ஆயுத கப்பல் சென்றபோது அந்த கப்பல் மர்மமான முறையில் தாக்கி அழிக்கப்பட்டது. இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று அப்போது சூடான் குற்றம் சாட்டியது. 

ஆனால் இதுபற்றி இஸ்ரேல் தரப்பில் கேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டனர். இதற்கிடையே சூடான் நாட்டு அமைப்பு ஒன்று சூடான் அரசை குற்றம் சாட்டியுள்ளது. ஆயுதகிடங்கில் அளவுக்கு அதிகமாக ஆயுதங்களை வைத்ததால் விபத்து ஏற்பட்டு விட்டது என்று அந்த அமைப்பு கூறியுள்ளதும் குறிப்பிடத் தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post