Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெல்லியில் பயங்கர வெடிபொருட்களுடன் தீவிரவாதிகள் கைது: புனே குண்டு வெடிப்புடன் தொடர்பு?

டெல்லியில் தீவிரவாதிகள்!
டெல்லியில் இன்று காலையில் சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்கள் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என தெரிய வந்தது. அவர்களிடம் சோதனை நடத்திய போது வெடி பொருள்களும் சிக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 3 பேரையும் தீவிரவாத தடுப்பு படை பிரிவிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். 

இதுபற்றி டெல்லி போலீசார் கூறும் போது, இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளை கைது செய்துள்ளோம். இவர்கள் அந்த அமைப்பின் தலைவரான யாகின் பத்கலுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்றனர். கைதான 3 பேருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் புனேயில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபற்றி அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post