Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுவிலக்கை வலியுறுத்தி இன்று காலை முதல் வைகோ உண்ணாவிரதம்!

தொடங்கியது வைகோவின் உண்ணாவிரதம்! 
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி காந்தி பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலை நகரங்களில் ம.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி வடசென்னை, தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களின் சார்பில் மறைமலைநகரில் இன்று காலை உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. 

உண்ணாவிரதத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். காலை 8 மணியளவில் வைகோ உண்ணாவிரத பந்தலுக்கு வந்து அமர்ந்தார். அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். 

இன்று மாலை 5 மணியுடன் உண்ணாவிரதம் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post