Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு - வால்மார்ட்டிக்கு வால் பிடிப்பது ஏன்?சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு - வால்மார்ட்டிக்கு வால் பிடிப்பது ஏன்? 


நம் நாட்டை , சீர் குலைக்க வந்திருக்கும் சில்லரை வணிக , பெரு நிறுவனமான வால் மார்ட்க்கு, ஆதரவாக இருக்கும் , மத்திய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளி 'ஏர்டெல்' நிறுவனத்திற்கும் பலத்த எதிர்ப்பு தொலை நோக்கு பார்வையுள்ள மேல் மட்டத்தில் மட்டும் தான்.

எந்த ஒரு போராட்டம் மக்கள் ஆதரவு இல்லாமல் வெற்றி அடையாது . மக்கள் ஆதரவு வேண்டும் என்றால், மக்கள் இடையே சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும் . ஆதற்கு எங்களைப் போன்றவர்கள் மிக சரியான முறையில் மக்களிடம் எடுத்து சென்று கொண்டு இருக்கிறோம் .

உலகம் முழுவதும் 5800 பெரிய கடைகள் கொண்ட வால்மார்ட்டுக்கு, இதை தவிர்த்து தளவாடங்கள், போக்குவரத்து,வீடு காணி விற்பனை, சுற்றுலா , நிதி ,  காப்பீடு போன்ற பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் சொந்தமாக உள்ளன. 2009 இல் அதிகபட்சமாக வருமானம் சுமார் 21, லட்சம் கோடி , இலாபம் மட்டும் 8 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.

வால்மாட்டின் நிழல் தான் சர்ச்சை. 

 வால்மார்ட் எங்கே சென்றாலும் அதுவும் கூடவே செல்லும். 2004 ல், மெக்ஸிகோவில் உலக புகழ் பெற்ற புராதன சின்னமான ' PYRAMID THE MOON ' இது கி பி 100 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு சின்னம் ஆகும் . இந்த இடத்திலிருந்து சுமார் 1 K M க்குள் தனது பிரமாண்டமான கடையை திறந்தார்கள். அப்பொழுது மிக பெரிய போராட்டங்கள் எல்லாம் நடந்தன.

ஒரு காலத்தில், செவ்இந்தியர்கள் வாழ்ந்த பூமியான, நஷ்வில்லே , அமெரிக்க , வில் வெள்ளையர்கள் குடியேறும்பொழுது, செவ்இந்தியர்கள் தனது வீரத்தை வீரியமாக வெளிபடுத்திய இடத்திலும் வால்மார்ட் சும்மா இருக்க முடியவில்லை , செவ் இந்தியர்களின் கல்லறைகளையும் , கல்வெட்டுகளையும் அழித்து தங்களது கடையை பரப்பினார்கள். 

இதுமட்டும் அல்ல பெனிசில்வேனியா வில் உள்ள டிக்ஸ்மொன்ட் அரசாங்க இடத்தையும் குத்தகை என்ற பெயரில் ஆகாரமித்து, மக்களின் போராட்டத்தினால் அந்த இடத்தை திரும்ப ஒப்படைத்தார்கள் .

வால்மாட்டின் தந்திரம், 

 8 லட்சம் கோடி வால் மார்ட் சம்பாதிக்க முடிகிறது, ஆனால் நம்மால் ஏன் 25000 ருபாய் கூட சம்பாதிக்க முடிவதில்லை என நினைக்கும் அண்ணாச்சிகளும், அம்புட்டு வருமானமா என வாய் பிளக்கும் மக்களும்,

8 லட்சம் கோடி சமபாதிக்க, லட்சத்தில் இருக்கும் சில்லறை வியாபாரிகளையும் , இதர வியாபாரிகளையும் அழித்து ஏகபோகமாக தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும், சம்பாதித்து கொண்டு இருக்கும் வால்மார்ட்க்கு, நாம் வெளிச்சம் காட்ட வேண்டும் என இப்பொழுது மத்திய காங்கிரஸ் விரும்பிகிறது.
நாட்டுக்கு கேடு , சந்து பெந்து களில் கடை வைத்து இருக்கும் ,அண்ணாச்சிகள் நேரடியாக தயாரிப்பாளர்களிடம் கொள்முதல் செய்ய முடியாது , நாலு கை மாற்றி ,நாலு பேர்க்கு உண்டான லாபமும் அதில் அடங்கி கடைசியாக தான் நமக்கு கிடைக்கிறது.

ஆனால் வால்மார்டின் கொள்முதல் தயாரிப்பாளர்களிடம் நேரடியாக இருக்கும் , இதனால் மிக குறைந்த விலையில் விற்க முடிகிறது. குறைந்த விலையில் விற்பதனால் மக்களுக்கு லாபம் தானே, என நினைபவர்களுக்கு , நன்மை விட மறைமுக துன்பம் தான் அதிகம்.

1 ) நேரிடையாக கொள்முதல் என்பதால் , அடிமாட்டு விலைக்கு தான் விவசாயிகளிடமும், தயாரிப்பாளர்களிடம் கொள்முதல் இருக்கும் .இது நாள் வரை கொள்முதலில் ஈடுபட்ட சிறிய ரக நிறுவனங்கள் காணாமல் போகும்.முதலாளிகளாக இருந்தவர்கள் தொழிலாளிகளாக மாறும் அவலமும் நடக்கும்.

2 ) வால்மார்ட்டில், அதிகபட்சமாக இந்தியா முழுவதும் சுமார் , 15000 முதல் 25000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் .ஆனால் அதை விட அதிக அளவில் இருக்கும் முதலாளிகள் , அவரை சார்ந்து இருக்கும் தொழிலாளிகள் , சிறிய ரக வியாபாரிகள் , அண்ணாச்சிகளும் வியபாரத்தை இழந்து , தெருவில் நிற்கும் நிலை உண்டாகும் , அப்பொழுது வால்மார்ட் வைப்பதே விலையாகும் .

3 ) அவர்கள் விற்பது எல்லாம் மூன்றாம் தர சீனா தயாரிப்புகளே. இதனால் உள் நாட்டு உற்பத்தி குறையும் , நாட்டில் பொருளதார மந்தமும் ஏற்படும்.

ஏற்கனவே சீனா பொருட்களால் நம் நாட்டின் உள் நாட்டு உற்பத்தி மிகவும் பாதிகபட்டுள்ளது.

ஆனால், நாம் யாருக்காக போராடி கொண்டு இருகிறோமோ , அவர்களே மறைமுகமாக மக்களிடம் எதிர் கருத்து உருவாகி விடும் விஷயம் நடந்து கொண்டு இருக்கிறது. அண்ணாச்சிகளும், சில்லரை வியாபாரிகளும் வர போகும் ஆபத்தை நன்கு உணர்ந்து இருகிறார்கள். ஆனால் அவர்கள் வியாபாரத்தில் செய்யும் செயல்கள் , மக்களின் கவனத்தை வால் மார்ட் போன்ற பெரு நிறுவனங்கள் மீதே திசை திருப்புகிறது.

1 ) வால்மார்டில் , விற்கப்படும் பொருட்கள் (M R P ) விலை விட மிக குறைவான விலையில் விற்க படுகிறது. ஆனால் , நாம் ஆதரிக்கும் வியாபாரிகளோ (M R P ) விலை விட அதிக விலையில் விற்கிறார்கள்.

2 ) வால்மார்டில் , விற்கப்படும் பொருட்கள் எல்லாம் காலவதியான தேதி க்கு பிறகு விற்க படுவதில்லை ஆனால் , நாம் ஆதரிக்கும் வியாபாரிகளோ காலவதியான தேதி க்கு பிறகும் பொருட்கள் விற்கிறார்கள் .

3 ) மின்சாரம் கிடையாது , ஆனால் குளிர் பானங்கள் வாங்கும் பொழுது , மின்சாரத்திற்கான விலை என அதிக தொகை வசூலிப்பது .

4 ) மிக அதிக லாபம் இருக்கும் பொருட்கள் கூட (M R P ) விலையில் விற்பது. இதை எல்லாம் தவிர்த்தால்,நிச்சயமாக, மக்கள் ஆதரவு கிடைக்கும், வால்மார்ட் போன்ற நிறுவனைங்களை ஓட ஓட விரட்ட முடியும் . வியாபாரிகளும் இப்பொழுது உள்ள சூழ்நிலைகேற்ப மாற வேண்டும்

வால்மார்டின் அரசியல் , 

வால்மார்டுக்கு , பணம் ஓs மணடலத்தை பிச்சிக்கிட்டு கொட்டுவதால். இயற்கையிலே அதிகார மனோபாவம் வந்து விடுகிறது.

உள்ளூர் வியாபாரிகளை ஒழிப்பது, மக்களை ஓட்டாண்டி ஆக்குவது, தங்களது தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பது, ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகக்கு கொண்டாட்டம் போல் தொழிலாளிகளிடம் நிற வேற்றுமை பயன்படுத்தி பிளவு படுத்துவது (அங்கு இருப்பதோ 2 வேற்றுமை தான், ஆனால் இங்கோ , சொல்லவே வேண்டாம்டா சாமி)

வால்மார்ட் எங்கு சென்றாலும் அவர்கள் முதலில் வளைப்பது அரசியல் வாதிகளை தான் , அதன் பின் தான் நாட்டை வளைப்பது.நம் நாடு தான் சரியான உதாரணம் , சிறிய அளவில் அனுமதிகும்பொழுது முன்பு எதிர்ப்பு பலமாக கிளம்புகிறது. , அப்பொழுது பிரதமர் அந்த அந்த மாநிலத்தின் விருப்பம் என சொல்லுகிறார் , இதனால் வால்மார்ட் க்கு ஒரு லாபமும் இல்லை.

சிறிது காலத்திற்கு பிறகு , டைம்ஸ் ஏடுகளில், செயலற்ற பிரதமர் என கட்டுரை வெளியிடபடுகிறது . உடனே இந்தியவுக்கான அமெரிக்க தூதவர் (நம்ம பிரதமர்) தான், 51 % அனுமதி கொடுக்கிறார் . உண்மையிலே , பிரதமர் இந்த வேலையே முன்பே செய்து இருந்தால் , இக் கட்டுரை வெளியிட பட்டு இருக்காது. இது தான் நிதர்சனம் . நமது, அரசியல் வாதிகள் , எப்பொழுது தான் நாட்டை பற்றி சிந்திக்க போகிறார்களோ , அவர்களுகே வெளிச்சம் .

வேண்டாம் 'வால்மார்ட்' 

நன்றி - சீனிவாஸ் திவாரி 
[vuukle-powerbar-top]

Recent Post