Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மிக் ஊழல் வழக்கில் 100 கோடி இழப்பீடு கேட்ட கோத்தாவுக்கு 25 கோடி ரூபாவே கிடைத்தது

இலங்கை விமானப்படைக்கு மிக் போர் விமானங்களை வாங்கியதில் இலங்கை பாதுகாப்புச் செயலர் ஊழல் செய்துள்ளதாக செய்தி வெளியிட்ட கொழும்பு சண்டே லீடர் வாரஇதழ், 25 கோடி ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என்று கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உண்மையற்ற, களங்கம் கற்பிக்கும் ஆக்கங்களைப் பிரசுரித்து, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஏற்படுத்திய அவதூறுக்கு நஷ்ட ஈடாக, 25 கோடி ரூபாவை செலுத்துமாறு லீடர் பப்ளிகேசன் நிறுவனத்துக்கு கல்கிசை மாவட்ட நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. 

மிக் போர் விமானங்களை கொள்வனவு செய்ததில், கோத்தாபய ராஜபக்ச ஊழல் செய்தால், நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டதாக சண்டே லீடர் பல ஆதாரங்களை வெளியிட்டிருந்தது. 

தனக்கு களங்கத்தை ஏற்படுத்திய சண்டே லீடர், மற்றும் அதன் ஆசிரியராக இருந்த லசந்த விக்கிரமதுங்கவுக்கு எதிராக கோத்தாபய ராஜபக்ச, 100 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி வழக்குத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post