Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உதயன், வலம்புரி மீது இலங்கை இராணுவத் தளபதி வழக்கு – 100 மில்லியன் ரூபா நட்டஈடு தரவேண்டுமாம்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் மற்றும் வலம்புரி நாளேடுகளிடம் தலா 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 

இந்த மான நட்டவழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக இலங்கை இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது. 

கடந்த ஜுலை 11ம் நாள் இந்த இரு நாளேடுகளும் வெளியிட்ட செய்தி தமக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு இழப்பீடாக தலா 100 மல்லியன் ரூபாவை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இலங்கை இராணுவத் தளபதி கோரியுள்ளார். 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை இராணுவத்தின் சட்டப்பிரிவு பணிப்பாளர் பிரிகேடியர் ரஞ்சித் ராஜபத்திரன, இலங்கை இராணுவம் சட்டத்துக்கு மேலாகவும் இல்லை, அதேவேளை கீழாகவும் இல்லை. இராணுவத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நாம் போராடுவாம் என்று கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post