Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இரவு 10 மணிக்கு மேல் அதிக ஒலி கொண்ட பட்டாசு வெடிக்க தடை

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் அதிக ஒலி கொண்ட பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு தான். மேலும் புத்தாடை, இனிப்பு பலகார வகைகள் இல்லாமல் தீபாவளியை நினைத்து பார்க்க முடியாது. பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து திருச்சி தீயணைப்பு துறை கோட்ட அலுவலர் சையது முகமது ஷா கூறியதாவது:–

பட்டாசு வெடிக்கும் போது யாருக்கும் பாதிப்பு இல்லாமல் வெடிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அதிக ஒலி எழுப்பும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாலைகள், பள்ளிகள், பெட்ரோல் பங்க், குடிசை வீடுகள், மருத்துவமனை போன்ற இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. ஒளி வண்ணம் ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கலாம். விபத்தில்லா தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும்.

மேலும் இரவு 10 மணிக்கு மேல் 110 டெசிபல் அளவுக்கு மேல் உள்ள வெடிகளை வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post