Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 10 பேர் பலி

இந்தோனேஷியாவின் சுலாவெகி தீவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களில் அங்கு 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 20 பேரை காணவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

மாமஷா மாவட்டத்தின் பாத்தான் குரு கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கரையோரம் இருந்த வீடுகள் அடித்து செல்லப்பட்டது.

தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி யூஸ்லிம் யூனஸ் தெரிவித்துள்ளார். மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post