Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வெலிக்கடையில் 11 கைதிகள் இலங்கை சிறப்பு அதிரடிப்படையினரால் படுகொலை

வெலிக்கடைச் சிறைச்சாலையில், கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், நேற்று அதிகாலையில் 11 கைதிகள் இலங்கையின் சிறப்பு அதிரடிப்படையினரால், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெலிக்கடைச் சிறைக்கலவரத்தில் கொல்லப்பட்ட 16 கைதிகளின் சடலங்கள் நேற்றுமுன்தினம் இரவே கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

நேற்றுக்காலை மேலும் 11 சடலங்கள் சிறை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கையின் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர அறிவித்திருந்தார்.

ஆனால், இந்த 11 சடலங்களும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.
கலவரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், நேற்று அதிகாலை இலங்கை சிறப்பு அதிரடிப்படையினரால், இவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனமிக அருகில் வைத்து இவர்கள் அனைவரும் தலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

இதன்காரணமாக, இவர்களின் சடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்ட செல்லப்படாமல்இலங்கை காவல்துறையின் சவச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனஇலங்கை சிறப்பு அதிரடிப்படையினர் கைதிகளை நீதிக்குப் புறம்பான முறையில் படுகொலை செய்துள்ள விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்த இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



[vuukle-powerbar-top]

Recent Post