Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவிற்கு தல யாத்திரை அழைத்துச் செல்வதாகக் கூறி 117 பேரிடம் பண மோசடி


இந்தியாவிற்கு தல யாத்திரையை மேற்கொள்ளும் பொருட்டு அழைத்துச் செல்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை சிலாபம் பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்நபர் தல யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 21 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளார்.
சந்தேகநபர் 117 பேரைபண மோசடி செய்து ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியா செல்வதற்கு கடவுச் சீட்டு பெற்றுத் தருவதாகக் குறிப்பிட்டு ஒருவரிடமிருந்து 18,000 ரூபா வீதம் தனது வங்கி கணக்கிற்கு வைப்பிடுமாறு கூறியுள்ளார்.
இவ்வாறாகது பலரிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடுத்து சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post