Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பணியில் இருந்த 119 செய்தியாளர்கள் படுகொலை : ஊடக கண்காணிப்பு அமைப்பு அறிக்கை

உலகம் முழுவதும் செய்தி சேகரிப்பு பணியில் இருந்த 119 செய்தியாளர்கள் இந்த ஆண்டில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாக வியன்னாவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகை அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டுக் கலவரம் நீடித்து வரும் சிரியாவில் மட்டும் 36 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த ஊடக கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. சிரியாவைத் தொடர்ந்து, சோமாலியாவில் 16 பேர் பலியாகி உள்ளனர். மெக்சிகோ, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. செய்தியாளர்கள் குறி வைத்து தாக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும், தகவல்கள் வெளியே தெரியக் கூடாது என்பதற்காகவே செய்தியாளர்கள் கொல்லப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 1997 ஆம் ஆண்டு முதல் செய்தியாளர்கள் மீதான தாக்குதலைக் கண்காணித்து வரும் சர்வதேச பத்திரிகை அமைப்பு, இந்த ஆண்டே அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post