Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

12 -12 -12 அன்று வெளியாகும் "அலெக்ஸ் பாண்டியன் " படப் பாடல்கள்.


நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று கார்த்தி நடிக்கும் "அலெக்ஸ் பாண்டியன்" படத்தின் பாடல்களை வெளியிட இப்படத்தின் இயக்குனர் சுராஜ் முடிவு செய்துள்ளார்.

 அலெக்ஸ் பாண்டியன் என்ற பெயரை கேட்டாலே "மூன்று முகம்" படத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரஜினி அவர்கள் தான் ஞாபகத்துக்கு வருவார்கள் அப்படி மிக பிரமாதமாக நடித்திருப்பார் அவர்.

எனவே அவருக்கு ஒரு சிறந்த பிறந்தநாள் பரிசு கொடுக்க நினைத்த "ஸ்டுடியோ கிரீன்" பட நிறுவனம் அன்றைய தினம் தங்கள் படைப்பான "அலெக்ஸ் பாண்டியன்" படத்தின் இசையை வெளியிட தீர்மானித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கார்த்தி நாயகனாகவும் அனுஷ்கா நாயகியாகவும் நடித்துள்ளனர்.வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறான் "அலெக்ஸ் பாண்டியன்".

[vuukle-powerbar-top]

Recent Post