Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பங்களாதேஷிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 பேர் பலி


பங்களாதேஷிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

டாக்காவின் புறநகர் பகுதியிலுள்ள குறித்த ஆடைத் தொழிற்சாலையின் ஒன்பதாவது மாடியில் தீ பரவியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

தீ சுவாலையில் இருந்து தப்பிக்கும் பொருட்டு மாடியில் இருந்து குதித்த சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் நான்காயிரத்து 500 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளதுடன், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் அவற்றில் தொழில்புரிகின்றனர்.

பங்களாதேஷின் வருடாந்த ஏற்றுமதியில் 80 வீதமானவை ஆடைதொழிற்துறை மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post