Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

12 வருட இசை பயணத்தை வெற்றிகரமாக தொடரும் ஹாரிஸ் ஜெயராஜ்.


ஹாரிஸ் ஜெயராஜ் தன்னுடைய  இசையமைப்பு வாழக்கையில் 12 வருடங்களை நேற்றுடன் பூர்த்தி செய்துள்ளார்.கெளதம் வாசுதேவ் மேனனின் "மின்னலே" படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார் ஹாரிஸ்.

நவம்பர் மாதம் 8 ஆம் தேதி 2000 ஆம் ஆண்டு,மின்னலே படத்தின் பாடல்கள் வெளியான போது, தமிழ் சினிமா இரசிகர்களால் இப்பாடல்கள்  மிக பெரியளவில் வரவேற்கப்பட்டது.இதனை தொடர்ந்து பல பெரிய வெற்றிகளை தனதாக்கி கொண்டார் இவர்.

12 வருடங்களை மிக வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஹாரிஷின் வெற்றியை கொண்டாடிய விழாவில் பேசிய இவர்,தன்னை வழிநடத்தும் இறைவனுக்கு முதல் நன்றியை தெரிவிப்பதாகவும்,தமிழ் சினிமா இசையமைப்பாளர்களுக்கும், குடும்ப அங்கத்தவர்களுக்கும்,நண்பர்கள், இரசிகர்கள் மற்றும் "மின்னலே"படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும்  கூறினார்.

[vuukle-powerbar-top]

Recent Post