Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வங்காளதேசத்தில் ரோகிங்யா ஆற்றில் படகு மூழ்கி 130 பேர் மாயம்

வங்காளதேசத்திலிருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறுவதற்காக 135 பேர் ஒரு படகின் மூலம் ரோகிங்யா ஆற்றில் நேற்றிரவு சென்று கொண்டிருந்தனர். 

மியான்மர் நாட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து மூழ்கியதில் 135 பேர் ஆற்றில் விழுந்தனர்.

இரவு நேரமானதால், அவர்களில் 5 பேர் மட்டுமே நீந்தி கரையேறினர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மற்ற 130 பேர் மாயமானது தெரிய வந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றது.
[vuukle-powerbar-top]

Recent Post