Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொடர்ச்சியாக 135 மணித்தியாலங்கள் ' கோல் ஒப் டியுடி' விளையாடி சாதனை (படங்கள்)

சிலர் சாதனை படைப்பதற்காகவே கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர்.

எனினும் கணினி விளையாட்டுக்களில் தொடர்ச்சியாக பல மணிநேரம் ஈடுபடுவது ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல.

இவ்வருட ஆரம்பத்தில் கணினி விளையாட்டுக்களில் தொடர்ச்சியாக 40 மணிநேரம் ஈடுபட்ட தாய்லாந்து இளைஞரொருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய இளைஞரொருவர் தொடர்ச்சியாக 'Call of Duty: Black Ops 2' விளையாடி சாதனை படைத்துள்ளார்.

ஒகன் காயா என்ற 28 வயதான குறித்த இளைஞன் 135 மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் கணனி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு முன்னர் 120 மணித்தியாலங்கள் கணினி விளையாட்டில் ஈடுபட்டமையே சாதனையாக இருந்தது.

எனினும் தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை 'Call of Duty: Black Ops 2' யை விளையாட ஆரம்பித்துள்ளார்.

விளையாட்டின் போது ஒவ்வொரு மணித்தியாலத்தின் போதும் 10 நிமிட இடைவெளி வழங்கப்பட்டது.

ஒகன் காயா எளிய உணவுகள் மற்றும் துரித சக்தி தரக்கூடிய பானங்களையும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் உட்கொண்டுள்ளார்.

அண்மையில் வெளியாகிய Call of Duty: Black Ops 2 விளையாட்டானது சுமார் 8 மில்லியனுக்கு அதிகம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




[vuukle-powerbar-top]

Recent Post