Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

13வது திருத்த ஒழிப்பு முயற்சிகள் குறித்தும் அமெரிக்க உயரதிகாரி கவனம்

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ்ஸா ஐரிஸ், 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். 

நேற்று இலங்கையின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்துப் பேசிய அவர், 13வது திருத்தம், அதிகாரப்பகிர்வை சர்ச்சைக்குரிய விவகாரமாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பரப்புரைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார். 

இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், அரசியல் விவகார அதிகாரி மைக்கல் ஹொனிக்ஸ்ரெய்ன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இந்தச் சந்திப்பின் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும், நல்லிணக்க முயற்சிகள் குறித்தும் ஹக்கீம் எடுத்துக் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post