Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இராமநாதபுரம் பரமக்குடியில் நேற்று முன் தினம் நடந்த வன்முறையால் 144 தடை உத்தரவு

இராமநாதபுரம் பரமக்குடியில் நேற்று முன் தினம் நடந்த வன்முறை சம்பவத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்த வேன் டிரைவர் சிவக்குமார், திருப்புவனம் அல்லிநகரைச் சேர்ந்த வீரணன், ஆசைத்தம்பி ஆகியோர் கொல்லப்பட்டனர். தேவர் குருபூஜைக்காகச் சென்றவர்களுக்கும், கிராமத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 3 பேர் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக 1 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பரமகுடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை சிறையில் அடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வன்முறை சம்பவத்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பேருந்துகள் இயக்கப்படாததால், ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதனால், இராமநாதபுரம் வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் அனைத்தும் இன்றும் மூடப்பட்டுள்ளன. உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இராமநாதபுரம், பரமக்குடியில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post