Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதல்களில் 18 பேர் பலி (படங்கள்)

ஆப்கானிஸ்தானில் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 18 பேர் பலியாகி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஹெம்மத் மாகாணத்தில் உள்ள மூஸா காலா மாவட்டத்தில் சாலை ஓரத்தில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் அந்த வழியாக வந்த திருமண கோஷ்டியினர் சென்ற வாகனம் சிக்கிக் கொண்டது.

இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் என்று ஹெல்மத் மாகாண காவல்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள லாக்குமன் என்ற இடத்தில் உள்ள பத்பாக் என்ற இடத்தில் இதே போல் சாலை ஓரத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

மூன்றவாது தாக்குதல் கந்தகாரில் நடைபெற்றுள்ளது. வெடிபொருட்கள் அடங்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மர்ம நபர் காவல்துறை நிலையத்தின் மீது மோத செய்ததில் 3 காவல்துறையினர் பலியாகியுள்னர்.

மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 2014ம் ஆண்டுக்குள் வெளிநாட்டு படையினர் வெளியேற உள்ள நிலையில் அங்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.





[vuukle-powerbar-top]

Recent Post