Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆம்பூரில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 200 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 200 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.

ஆம்பூரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை கம்பிக்கொல்லை, மாந்தோப்பு, மருத்துவநகர், MV சாமி நகர், நதிசீலபுரம், பன்னீர்செல்வம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.

5 KM க்கு மேல் ஆம்பூரில் வீடுகள் வெள்ளத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அங்கிருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ளநீர் தேங்கி கடலுக்கு செல்லமுடியாமல் இருப்பதற்கான காரணம் வடிகால் அமைப்புகள் சரியாக அமையப்பெறவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post