Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிளிநொச்சியில் இயங்கிய மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று 20 முறைப்பாடுகள்!


இறுதிப் போரின் போது காணமற் போனவர்கள் தொடர்பான சுமார் 20 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை நேற்றுப் புதன்கிழமை கிளிநொச்சியில் இயங்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் 3 ஆம் திகதியில் இருந்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் நடமாடும் அலுவலகம் ஒன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையின் அலுவலகத்தில் உறவினர்கள் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஒக்ரோபர் மாதம் 3 ஆம் திகதியில் இருந்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் நடமாடும் அலுவலகம் ஒன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அலுவலகத்தின் ஒரு பகுதியில் ஒவ்வொரு புதன்கிழமையும்  இயங்கி வருகின்றது.
இந்தநிலையில் நேற்றுப் புதன்கிழமை மேற்படி அலுவலகத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட உறவினர்கள் தங்களுடைய பிள்ளைகள் மற்றும் இறுதிப் போர்க் காலத்தில் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் பற்றிய எந்தவிதமான தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் இது தொடர்பான விவரங்களை பெற்றுத் தருமாறும் தமது முறைப்பாடுகளை கிளிநொச்சி நடமாடும் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
இதைவிட ஏற்கனவே இருபத்திமூன்று வரையான முறைப்பாடுகள் காணாமற்போனமை தொடர்பாக கிளிநொச்சி நடமாடும் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைவிட காணிகள் தொடர்பான முறைப்பாடுகள் அரச அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள் என அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post