Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதலில் "சென்னை 28 " அதன் பின்னரே "மங்காத்தா".


இதுவரை தாங்கள் இயக்கிய படங்களில் எந்த படம் தங்களுக்கு பிடிக்கும் என்ற கேள்வியை இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது,தான் எத்தனை படங்கள் இயக்கியிருந்தாலும் எப்போதுமே தனக்கு  பிடித்த படமாக "சென்னை 28 " இருப்பதாக கூறியிருந்தார்.

தெருவில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள் சம்பந்தப்பட்ட படமாக வெளிவந்த "சென்னை 28 "படமே தன்னுடைய முதல் தேர்வு எனக் கூறிய வெங்கட் பிரபு,அஜித் நடிப்பில்  அவர் இயக்கிய "மங்காத்தா" இரண்டாவதாக தனக்கு பிடித்த படம் எனக் கூறியிருந்தார்.

"சரோஜா" பின்னர் "கோவா" ஆகிய படங்கள் முறையே 3 ஆவது மற்றும் 4 ஆவது இடத்தில் இருப்பதாகவும், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் ஒன்றை எடுக்க நினைத்தே "கோவா" திரைப்படத்தை எடுத்ததாகவும், ஆனால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார்.

வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் "சரோஜா" மிக பெரியளவில் வெற்றிகண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


[vuukle-powerbar-top]

Recent Post