Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தரைதட்டி நிற்கும் கப்பல் 2 நாட்களில் மீட்க்கப்படும் ~ ஜி.கே.வாசன்

நீலம் புயல் காரணமாக சென்னை பெசன்ட்நகர் அருகே தடைதட்டி நிற்கும் கப்பலை மீட்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணியைப் பார்வையிடுவதற்காக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை மந்திரி ஜி.கே.வாசன் இன்று மாலை சென்னை துறைமுகத்தில் இருந்து பட்டினப்பாக்கத்திற்கு மியா என்ற சிறிய கப்பலில் சென்றார்.

தரைதட்டி நிற்கும் கப்பலை மீட்கும் பணியை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேரில் சென்று, பார்வையிட்டார்.

அதன்பிறகு, நடுக்கடலில் கப்பலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், கடலோரக் காவல்படை, துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இணைந்து, கப்பல் மீட்புப் பணி தொடர்பாக பல கூட்டங்களை நடத்தியும், வியூகம் அமைத்தும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்னும் 2 நாட்களில் கப்பலை மீட்டு, கடலுக்குள் இழுத்துச் செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post