Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2 ஜி வழக்கு விசாரணை - ஓராண்டு நிறைவு ஒரு முன்னேற்றமும் இல்லை


மிகவும் பிரபல ஊழல் வழக்கான 2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு துவங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.


மத்திய அரசின் மேல் சுமத்தப்பட்டுள்ள ஊழல் வழக்குகளில் மிகவும் பிரபலமான வழக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு.இந்த வழக்கின் விசாரணை துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளனர் மேலும் 3000 பக்கங்களுக்கு சாட்சி தகவல்கள் பதியப்பட்டுள்ளன.

ஆனால் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதியே மறு ஏலம் நடத்த உத்தரவிட்டும் இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த வழக்கிற்கு மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் தரவில்லை என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினசரி விசாரணையாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி 17 பேர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்.கடந்த ஓராண்டில் ஆ.ராசா மற்றும் 16 பேர் தவிர எஸ்ஸார் குரூப் நிறுவனம் லூப் டெலிகாம் நிறுவனம் ஆகியவையும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக சேர்க்கப்பட்டுள்ளது.இதுவரை ராசா தொடர்புடைய குற்றச்சாட்டில் சிபிஐ சார்பில் 77 சாட்சியங்களை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் மிக முக்கிய நபர்களான அட்டர்னி ஜெனரல் வாஹனவதி ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் சுப்பாராவ் இடைத்தரகர் நீரா ராடியா போன்றோர் விரைவில் விசாரிக்கப்பட உள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில்2 ஜி முறைகேடு குறித்த வழக்கை சிபிஐ தனி நீதிமன்றம் விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபணமானால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post