Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2ஜி அலைக்கற்றை வழக்கு - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

2ஜி அலைக்கற்றை வழக்குகளில் மத்திய அரசு மிகுந்த அலட்சியத்துடன் செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 


2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று , வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் துணை செயலாளர் அளவிலான அதிகாரி ஒருவர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.இதனை எற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். செயலாளர் அளவிலான அதிகாரி ஒருவர்தான் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும், உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட 122 உரிமங்களுக்கும் மறுஏலம் நடத்தாதது ஏன்? இது தொடர்பாக 2 நாட்களுக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், 2-ஜி வழக்குகளை கையாள்வதில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எதிர்பார்த்த உரிமங்களுக்கான ஏலம் திட்டமிட்டே நடத்தப்படவில்லை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கேள்வி எழுப்பியபோது, மத்திய அரசின் வழக்கறிஞர் மவுனமாக இருந்ததாகசவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதேபோல் 2ஜி ஊழல் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் ஆஜரானார். 2007 – ம் ஆண்டு முதல் 2008 – ம் ஆண்டு வரை நிதித்துறை செயலாளராக இருந்த சுப்பாராவ், 2 ஜி வழக்கில் சிபிஐ தரப்பின் முக்கிய சாட்சியாக விளங்குகிறார்.

நீதிமன்றத்தில் தான் அளித்த சாட்சியத்தின் போது 2001 – ம் ஆண்டு நிர்ணயித்த விலைக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை எப்படி கொடுக்க முடியும் என்று தான் கேள்வி எழுப்பியதாக சுப்பாராவ் தெரிவித்தார். இது தொடர்பாக, அப்போதைய தொலைத்தொடர்பு செயலாளர் மத்தூருக்கு கடிதம் எழுதியதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான பல்வேறு குறிப்புகளையும் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஏ.கே. சிங், சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனியிடம் காண்பித்தார். சுப்பாராவ் இன்றும், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தனது சாட்சியம் அளிப்பார் என்று தெரிகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post