Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆப்கானிஸ்தான் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தற்கொலை தீவிரவாதி தாக்குதல் நடத்தியுள்ளான்.

தீவிரவாதி தான் வைத்திருந்த வெடிகுண்டை காவல் நிலையத்தின் முன் வெடிக்க செய்தான். இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், சிலர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு தலீபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post