Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஊட்டி மலை ரயில் மீது பாறாங்கல் உருண்டு விழுந்தது: 2 பேர் காயம்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்குத் தினமும் காலை 7.15 மணியளவில் மலை தொடருந்தில் பயணம் செய்ய அனைவரும் விரும்புவார்கள்.

வழக்கம் போல், மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை தொடருந்து இன்று காலை 9 மணியளவில் அடர்லி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மலை உச்சியிலிருந்து உருண்டு வந்த பாறாங்கல் ஒன்று தொடருந்தில் மீது மோதியது.

இந்த விபத்தில் தொடருந்தில் பயணம் செய்த சகினான்ஸ் (வயது 11) சிறுமியும், மற்றொரு பெண்ணும் காயமடைந்தனர்.

தொடருந்து மீது பாறாங்கல் உருண்டு விழுந்த தகவல் அறிந்ததும் ரயில்வே மற்றும் மீட்புப் பணி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post