Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2ஜி வழக்கு - ராசா,கனிமொழி மனுக்களை விசாரிக்க தடை

2ஜி அலைக்கற்றை வழக்கில் ராசா,கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 20 பேரின் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 20 பேர் தங்களை விடுவிக்கக் கோரி மனுதாக்கல் செய்தனர்.இதில் திமுக வை சேர்ந்த ராசா மற்றும் கனிமொழியின் மனுக்களும் அடங்கும்.இந்த நிலையில் இதில் சிபிஐ தலையிட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்று முறையிட்டது.இதனால் மனுதாக்கல் செய்த 20 பேரின் மனுக்களும் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

மேலும் 2ஜி வழக்கில் மறு ஏலம் நடத்த சொல்லி உத்தரவிட்ட பின்பும் மத்திய அரசு ஏன் இன்னும் நடத்தவில்லை என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.முன்னதாக மறு ஏலம் நடத்த சொல்லி பிப்ரவரி 2-ம் தேதியே மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post