Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வெலிக்கடைச் சிறைக் கைதிகளிடம் சிக்கிய 340 துப்பாக்கிகள்


வெலிக்கடை சிறையில் நேற்று மாலை ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, நேற்றிரவு இலங்கை காவல்துறை பேச்சாளர் தெரிவித்திருந்த போதும், அதற்குப் பின்னரும் அவ்வப்போது துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. 

நேற்று சிறைக்கைதிகள் மேற்கொண்ட கலவரத்துக்கு பாதாள உலகத் தலைவர்களான களு துசார மற்றும் தொட்டலங்க கபில ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். 

மோதலில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 கைதிகளின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

காயமுற்ற 6 கைதிகளும், ஆறு சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளுக்குள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

சிறைக்குள் இருந்த இரண்டு ஆயுதக்களஞ்சியங்களை உடைத்து அங்கிருந்த 250 துப்பாக்கிகள் மற்றும் 90 கைத்துப்பாக்கிகளை கைதிகள் கைப்பற்றியுள்ளனர். 

எனினும் அவற்றுக்குரிய ரவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அங்கு இருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

மோதலில் படுகாயமடைந்த இலங்கை சிறப்பு அதிரடிப்படை தளபதி ரணவானவுக்கு நேற்றிரவு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

அவரது வயிற்றில் துப்பாக்கி ரவை பாய்ந்திருந்ததால், அதை அகற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். 

எனினும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மோதலின் போது சிறையில் இருந்து தப்பி, முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று கொண்டிருந்த கைதிகள் மீது இலங்கைப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 

இதில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post