Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பரமக்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பரிதாபமாக பலி

பரமக்குடி பகுதியில் மலே ரியா, டைபாய்டு உள் ளிட்ட காய்ச்சல்களால் ஏராளமா னோர் பாதிக்கப்பட்டுள்ள னர். காய்ச்சல் கண்டவர்கள் உடல் வலி மற்றும் நடக்க முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

மேலும் சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பர்மா காலணியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மனைவி ராதிகா. கண்ணன் கேரளா மாநிலம் கொச்சியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் ஹரிணிஸ்ரீ (வயது 3)க்கு கடந்த 12ந் தேதி திடீரென காய்ச்சல் ஏற் பட்டது. உடனே சிறுமியை பரமக்குடியில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் அனும தித்து சிகிச்சை அளித்தனர். அப்போது குழந்தையை பரி சோதித்த டாக்டர் அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சிறுமியை அனுமதித்த னர். ஆனால் நாளுக்கு நாள் சிறுமியின் உடல்நிலை மோச மாகிக் கொண்டே வந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் சிறுமி ஹரிணிஸ்ரீ பரி தாபமாக இறந்து போனார். டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி யான சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள் ளது. எனவே சுகாதாரத் துறையினர் டெங்கு கொசுக் களை ஒழிக்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
[vuukle-powerbar-top]

Recent Post