Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்னும் 3 வாரங்களில் நிறைவுக்கு வரும் "இரண்டாம் உலகம்".


செல்வராகவன் இயக்கும் "இரண்டாம் உலகம்" படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.இன்னும் 3 வார காலத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பு யாவும் நிறைவடையும் என கூறியுள்ளனர் இப்படக் குழுவினர்.

ஆர்யா மற்றும் அனுஷ்கா ஆகியோர் நடித்துக்கொண்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்று வந்தது.தற்போது ஆந்திராவில் உள்ள  மலைப்பாங்கான பிரதேசமான இராஜமுந்திரி நோக்கி பயணித்துள்ளனர் இப்படக்குழுவினர்.

இன்னும் சில வாரங்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பு அத்தனையும் முடிவடைந்து, திரையிட தேவையான வேலைகளில் மும்முரமாக ஈடுபடவுள்ளனர். மேலும் இப்படத்தின்  ஒலி ஒளி அமைப்பை சிறந்த முறையில் அமைப்பதற்காக பிரித்தானியாவில் இருந்து விஷேட குழு ஓன்று சென்னை வந்துள்ளது.

இப்படத்திற்காக முதன்முதலில் இணைந்துள்ளனர் செல்வராகவன் மற்றும் ஹாரிஸ்.


[vuukle-powerbar-top]

Recent Post