Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அந்நிய முதலீடு : டிச 4, 5ந்தேதி வாக்கெடுப்புடன் விவாதம்

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு விவகாரத்தில் விதி எண் 184ன் கீழ் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு மக்களவை சபாநாயகர் மீராகுமார் இன்று காலையில் அனுமதி அளித்தார்.

அதன்படி டிசம்பர் 4,5ம் தேதிகளில் மக்களவையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெறும் என அவர் தற்போது தெரிவித்துள்ளார் சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வந்தது.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தும் காங்கிரஸ் முயற்சி வெற்றி பெற்றது. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தி.மு.க.,ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து கூட்டணி கட்சிகள் மத்தியில் காங்கிரசுக்கு ஆதரவு கிட்டியது.

தொடர்ந்து பா.ஜ.க., வையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியது காங்கிரஸ். நேற்று பா.ஜ.க.,வின் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லியை மத்திய அமைச்சர் கமல்நாத் சந்தித்துப் பேசினார். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு விவகாரத்தில் விதி எண் 184ன் கீழ், வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது. இத்தககைய சூழலில் நேற்றைய விடுமுறைக்குப் பின்னர் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவை சபாநாயகர் மீராகுமார், பா.ஜ.க.,வின் கோரிக்கையை ஏற்று மக்களவையில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த அனுமதி கொடுத்தார். தொடர்ந்து சபாநாயகர் மீராகுமாருக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், அவை சமூகமாக நடைபெற ஒத்துழைப்பு நல்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

5வது நாளாக முடங்கியது மாநிலங்களவை : எதிர்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அவை கூடியதும் அந்நிய முதலீடு தொடர்பாக பா.ஜ., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவையில் மட்டும் வாக்கெடுப்புடன் விவாதம் நடத்த அனுமதி கொடுத்திருக்கும் நிலையில், மாநிலங்களவையில் இவ்விவகாரத்தில் ஓட்டெடுப்புடன் விவாதம் நடத்த அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி பா.ஜ., உறுப்பிவனர்கள் ரவிசங்கர் பிரசாத், வெங்கய்யா நாயுடு ஆகியோர் கோஷமிட்டனர்.

அமளி நிலவியதால் மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு தொடர்பாக அமளி ஏற்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையை நாளைவரை ஒத்திவைத்து அவைதலைவர் உத்தரவிட்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post