Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

50 ஆவது நாளை பூர்த்தி செய்யும் ஸ்ரீதேவியின் "இங்கிலீஷ் விங்க்ளிஷ்".


நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான "இங்கிலீஷ் விங்க்ளிஷ்" படம் திரையிடப்பட்டு இன்றுடன் 50 நாட்கள் பூர்த்தியாகிவிட்டன.

பால்கியின் தயாரிப்பில் கௌரி ஷிண்டே இயக்கத்தில் உருவான இப்படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் மிக வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது.தமிழ் தெலுகு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியான இப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை உலகம் முழுவதிலும் திரையிடப்பட்ட இப்படத்தின் இந்தி மொழியாக்கப் படமானது இதுவரையில் 39 கோடிகள் வசூல் செய்துள்ளது.இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுகு மொழியாக்கப் படங்களில் ஸ்ரீதேவியுடன் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் அஜித்.அதேபோல் இப்படத்திற்கான இந்தி மொழியாக்கத்தில் அமிதாப் பச்சன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்ரீதேவி நடித்த படம் சிறந்த முறையில் வெற்றிபெற்றுள்ளதால் அவரின் அடுத்த கட்ட படம் குறித்த விடயங்களை அறிய ஆவலாக உள்ளனர் அவரது இரசிகர்கள்.

50 ஆவது நாளைக் கொண்டாடும் "இங்கிலீஷ் விங்க்ளிஷ்" படத்தில் நடித்த ஸ்ரீதேவி, இயக்குனர் கௌரி ஷிண்டே மற்றும் தயாரிப்பாளர் பால்கி ஆகியோருக்கு  அலை செய்திகள் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

[vuukle-powerbar-top]

Recent Post