Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கௌதமால நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

கௌதமாலா நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது.

மெக்சிகோ நாட்டை ஒட்டியுள்ள மலை பிரதேசமான கௌதமாலாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அங்கு மீட்பு பணியில் தொடர்ந்து மீட்பு குழுவினர் ஈடுபட்டு உயிரிழந்தோர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் 24 பேரை காணவில்லை.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அந்நாட்டு அதிபர் மொலீனா தெரிவித்துள்ளார்.

காயம் அடைந்த 200 பேர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலநடுக்கத்தினால் அங்கு சாலைகள் அனைத்தும் மிகவும் சேதம் அடைந்துள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post