Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"விஸ்வரூபம்" படத்திற்காக 5 பாடல்கள்.


கமல் ஹாசன் தயாரித்து இயக்கி நடித்து வரும் "விஸ்வரூபம்" படத்தில் மொத்தமாக 5 பாடல்கள் உள்ளன.இப்பாடல்கள் கமல் மற்றும் ஷங்கர் மகாதேவன் ஆகியோரால் பாடப்பட்டுள்ளது.இவற்றுள் நான்கு பாடல்கள் இப்படத்திற்காக பிரத்தியேகமாக இசையமைக்கப்பட்டும் ஒரு பாடல் ஏற்கனவே வெளிவந்த பாடலாகவும் அமைந்துள்ளது.

அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்டக்காட்சியில் உள்ள  "யார் என்று புரிகிறதா..." என்ற பாடலாவது முன்கூட்டியே வெளியாகும் என எதிர்பார்த்திருக்கும் கமல் இரசிகர்களுக்கு இப்பாடல் இன்னும் வெளிவராதது சற்று ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,கமல் ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என ஆரம்பத்தில் கிசுகிசுக்கப்பட்டது.ஆயினும் அன்றைய தேதியிலும் அது நடைபெறவில்லை.

[vuukle-powerbar-top]

Recent Post