Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 675 புதிய பேருந்துகள் - முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 675 பேருந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழக மத்திய பணிமனையில் இன்று தொடங்கி வைத்தார்.


இந்த பேருந்துகளில் 286 புதிய வழிதடங்களில் இயங்கும் பேருந்துகளும் அடங்கும். சென்னையில் இருந்து கழுகுமலைக்கும் சென்னையில் இருந்து பரமக்குடிக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன. ஸ்ரீரங்கத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் 28 புதிய வழித்தடங்களுக்கும் புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன. 

இதே போல்திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தில் 85 புதிய பேருந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இத்துடன் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை 20ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post