Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை பலி

இராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை பலியாகியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இராமநாதபுரம் தண்ணீர் பந்தலை சேர்ந்த முகமது ஹசிப் எனும் 6 மாத குழந்தை காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தது.தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தைக்கு டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

தண்ணீர் பந்தல் என்னும் பகுதியில் காய்ச்சல் அறிகுறியுடன் பலர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post