Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருப்பூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு 70 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி செய்பவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டி யலில் சேர்க்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் தயாரிக் கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 1ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அந்தந்த வாக்குச்சாவடி களுக்கு சென்று பொதுமக்கள் புதிய வாக்காளர் சேர்க்கைக் கும், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் உள் ளிட்ட பணிகளையும் மேற் கொள்ளலாம் என்றும் அறி விக்கப்பட்டது. இந்த பணி களை மேற்கொள்ள நவம்பர் மாதம் 20ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மாலையுடன் புதிய வாக்கா ளர் சேர்க்கை பணி முடிந் தது.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், உடுமலை ஆகிய 8 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக் காளர் சேர்க்கை பணி நடந்து முடிந்து உள்ளது. புதிய வாக்காளர் சேர்க்கை பணிக்கு திருப்பூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் பேர் புதிதாக விண் ணப்பித்து உள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்ற மாவட்டங்களில் வசிப்பவர்கள் புதிய வாக் காளர் பட்டியலில் சேர விண் ணப்பித்திருந்தாலும் அந்தந்த மாவட்டங்களில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப் பத்தை பெற்று சரிபார்க்கும் பணிகள் நேற்று நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் முழுவதுமாக முடிந்து அதன்பிறகே தமிழக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித் தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post