Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒரே நாளில் மட்டும் 7 இடங்களில் தீ விபத்து

தீபாவளி வானத்தில் வெடிக்கும் வெடி விழுந்து வீட்டின் மாடியில் போடப்பட்டு இருந்த கீற்று கொட்டகை எரிந்து சாம்பல் ஆனது. நேற்று ஒரே நாளில் மட்டும் 7 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதன் மூலம் எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்படக்கூடும் என்பதால் தீயணைப்புத்துறையினர் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையின் முதல் நாளான நேற்று மாலை முதல் பட்டாசு வெடிக்க தொடங்கினர். பட்டாசு வெடித்ததில் திருச்சியில் நேற்று ஒரே நாளில் 7 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி பீமநகர், தில்லைநகர், விமானநிலையம் அருகே உள்ள திரு.வி.க.நகர், எடமலைப்பட்டிபுதூர், மேலப்புலிவார்டுரோடு ஆகிய இடங்களில் உள்ள குடிசை வீடுகளில் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது.

நேற்று இரவு பொன்மலைப்பட்டி ஹைவேஸ்காலனி பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் போடப்பட்டு இருந்த கீற்று கொட்டகையில் தீபாவளி ராக்கெட் விழுந்து தீப்பிடித்தது.

இதையடுத்து தீ மள,மளவென பரவி கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து, மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.

மேலும் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் கூடுதல் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்கவும், தீ விபத்தில்லாத வகையில் தீபாவளியை கொண்டாடவும் தீயணைப்புத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post