Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மேற்குவங்கத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 7 பேர் உயிரிழப்பு

மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இங்குள்ள பேரதங்கா கிராமத்தில் சுமார் 20 பேர் மது அருந்தியதில் 7 பேரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனை செல்லும் வழியில் ஒருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

இதனிடையே, கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் நேற்று உயிரிழந்தனர். மேலும், இமாம்பரா சர்தார் மருத்துவமனையில் தொடர்ந்து 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக 3 பேரை ஹுக்ளி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு தெற்கு பர்கனால் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 143 பேர் உயிரிழந்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post