Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போபாலில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் பலி

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உயர் நிலை தண்ணீர் தொட்டி ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் அதன் அருகே உள்ள குடிசையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் மீது இடிந்த தொட்டி விழுந்ததால் 7 பேர் பலியாகி உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 35 பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டி 18 வருடங்கள் ஆன தண்ணீர் தொட்டி முறையான பராமரிப்பு இன்றி இடிந்து விழுந்துள்ளது என்று அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post