Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பால் தாக்கரே மறைவு: ரஜினிகாந்த் உட்பட பிரபலங்கள் இரங்கல்!

தாக்கரே மறைந்தார்!
சிவசேனா தலைவர் பால் தாக்கரே இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மராட்டியத்தில் சிவசேனாவை வலுவான சக்தியாக உருவாக்கியவர் பால் தாக்கரே. அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரது தொண்டர்கள் அமைதி காத்து, நிதானமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். மேலும் உத்தவ் தாக்கரேவை தொடர்பு கொண்டும் தனது இரங்கலை தெரிவித்தார். 

தாக்கரேயின் மறைவால் அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். 

அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் தாக்கரே என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார். தாக்கரேயின் மறைவு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருப்பதாக சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

படைவீரனைப் போல செயல்பட்ட பால் தாக்கேர மறைந்ததால், நாட்டுப்பற்று அடையாளத்தை நாடு இழந்துவிட்டது என்று குஜராத் முதல்வர் மோடி கூறியுள்ளார். தாக்கரே உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக மோடி நாளை மும்பை செல்கிறார்.

என் தந்தை போன்றவரும், தலைசிறந்த தலைவருமான தாக்கரே மறைந்துவிட்டார் என்று ரஜினிகாந்த் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


[vuukle-powerbar-top]

Recent Post