Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வீழ்ந்தது மும்பையின் அரசியல் ஆலமரம்: விடுதலைப் புலிகள் ஆதரவாளர் தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு!

பால் தாக்கரே இயற்கை எய்தினார்!
மும்பையின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய பால் தாக்கரே இன்று மாலை 3.30 மணிக்கு காலமானார். அவரது இளமைக்கால வாழ்க்கையை வாழ்க்கையை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

பால் தாக்கரேவின் இளமைக்கால வாழ்க்கை:

பால் தாக்கரே' என்று பிரபலமாக அறியப்படும் பால் கேஷவ் தாக்கரே மகாராட்டிராவில் மராத்தியர்களுக்கான இனம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிவசேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியத்துவக் கட்சியின் நிறுவியவரும் தலைவரும் ஆவார்.

பால் தாக்கரே, மாதமிருமுறை வெளிவரும் பத்திரிகையான "பிரபோதன்" அல்லது "ஞானோபதேசம்" என்று பொருள்படும் பத்திரிகையில் தாம் எழுதிய கட்டுரைகளால், பாலகட் மத்தியப் பிரதேசத்தில், பிரபோதாங்கர் டாக்கரே என்றும் அறியப்பட்ட) கேஷவ் சீதாராம் தாக்கரே என்பவரின் மகனாகக் கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்.

கேஷவ் தாக்கரே ஒரு முற்போக்கு சமூக சேவகர் மற்றும் எழுத்தாளராக விளங்கினார். அவர் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகப் பணியாற்றி (ஒன்றிணைந்த மஹாராஷ்டிரா இயக்கம் என்று பொருள்தரும்ப) சம்யுக்தா மஹாராஷ்டிரா சல்வால் என்னும் இயக்கத்தின் மூலம் 1950ஆம் ஆண்டுகளில் மராத்திய மொழி பேசும் மாநிலமாக மஹாராஷ்டிரா உருவாவதிலும், அதன் தலைநகராக மும்பை அமைவதிலும் முக்கியப் பங்காற்றினார்.

பால் தாக்கரே தமது தொழில் வாழ்க்கையை மும்பையில் 1950ஆம் ஆண்டுகளில் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்னும் ஒரு பத்திரிகையில் கேலிச் சித்திரக்காரராகத் துவங்கினார். அவரது கேலிச் சித்திரங்கள் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஞாயிறு பதிப்புகளிலும் வெளியாயின. 1960ஆம் வருடம் அவர் மர்மிக் என்னும் கேலிச்சித்திர வார இதழ் ஒன்றைத் தனது சகோதரருடன் இணைந்து துவக்கினார். குறிப்பாக குஜராத்தியர் மற்றும் தென்னிந்தியக் கூலி வேலையாட்களை இலக்காக்கி, மும்பையில் மராத்தியர்-அல்லாதவர்களின் செல்வாக்கை எதிர்ப்பதற்கான பிரசாரமாக அதைப் பயன்படுத்திக் கொண்டார்.

1966ஆம் வருடம் ஜூன் மாதம் 19ஆம் தேதி, அவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் பிறப்புரிமையாளர்களின் (மராத்தியர்களின்) உரிமைகளுக்காகப் போராடும் நோக்கத்துடன் சிவசேனாவைத் துவக்கினார். சிவசேனாவின் ஆரம்ப கால நோக்கமானது தென்னிந்தியர்கள், குஜராத்திகள் மற்றும் மார்வாடிகள் போன்று வேறு மாநிலங்களிலிருந்து வந்த குடியேறிகளுக்கு எதிராக மராத்தியர்கள் இருந்தது.

அரசியல் ரீதியாக, சிவசேனா பொதுவுடைமைக் கட்சிக்கு எதிரானதாக விளங்கி, மும்பையின் பிரதான வர்த்தகத் தொழிலாளர் சங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிடமிருந்து பறித்து, பெரும்பாலும் குஜராத்தி மற்றும் மார்வாடி வணிகத் தலைவர்களிடமிருந்து காப்புப் பணம் வசூல் செய்வதாகவே இருந்தது. பின்னர், இது பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி)யுடன் கூட்டு ஏற்படுத்திக் கொண்டது. பிஜேபி-சிவ சேனா கூட்டணி 1995ஆம் வருடம் மஹாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி அடைந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1995 முதல் 1999வது வருடம் வரை அரசு புரிந்த காலகட்டத்தில் தாக்கரேயை "தொலைவிலிருந்து இயக்குபவர்" என்று அடைபெயர் இட்டு அழைத்தனர். இதன் காரணம் அவர் அரசின் கோட்பாடுகள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு பெரும்பங்கு ஏற்றதேயாகும்.

சிவசேனா கட்சி, மராத்தி மனூ க்களுக்கு (சாமானிய மராத்தியர்கள்) மும்பை நகரில் பொதுத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் உதவியதாக தாக்கரே கோருகிறார். சிவ சேனா அரசு புரிந்த கால கட்டத்தில், தனது அடிப்படை சித்தாந்தமான மண்ணின் மைந்தர்கள் என்னும் கருத்தாக்கத்துக்கு மாறாக, மராத்திய இளைஞர்கள் பெரும்பாலானோரின் முக்கியப் பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகளான பொதுவுடமைக் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

86 வயதான பால்தாக்ரே இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மும்பையின் வலுவான சக்தியாக பால்தாக்ரே விளங்கினார். 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு

தான் தமிழீழத்திற்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் என்று தாக்கரே கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "விடுதலைப் புலிகளின் கம்பீரமான போராடும் முறைக்காக நான் அவர்களைக் குறித்துப் பெருமை அடைகிறேன்"

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை உத்தரவை, இந்திய நடுவண் அரசு நீக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். அவருக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம்.
[vuukle-powerbar-top]

Recent Post