Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சாதி மறுப்பு திருமணத்தால் தீவைப்பு: கலவரத்துக்கு காரணமான தர்மபுரி எஸ்.ஐ., மீது வழக்குப் பதிவு!

பற்றி எரியும் சா'தீ'!
தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாயை சேர்ந்த ராஜீவின் மகன் நாகராஜ், வயது-49. இவரது மகள் திவ்யா (21) , நற்சுங் பயிற்சி முடித்தவர். இவரை கடந்த சில தினங்களுக்கு முன் நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளங்கோ மகன் இளவரசன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இது தொடர்பாக அறியகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்ற போது, அங்கிருந்த இளங்கோவின் உறவினரான எஸ்.ஐ., பெருமாள் என்பவர் புகாரை வாங்க மறுத்ததோடு, நாகராஜா கேவலமாக பேசியுள்ளார். அப்போது, அங்கிருந்த இளங்கோ அவரது மகன் இளவரசன், விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் நந்தன், தர்மபுரி குண்டு சக்தி, மாரவாடி ராஜா, நத்தம் காலனி “பொடா” பழனிச்சாமி ஆகியோர் நாகராஜை தரக்குறைவாக பேசியுள்ளனர்.

மனவேதனை அடைந்த நாகராஜ் 07.11.2012 அன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது கணவரை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ., பெருமாள் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகராஜ் மனைவி தேன்மொழி, மீண்டும் அறியகுளம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், போலீஸார் புகாரை வாங்க மறுத்தனர்.

நாகராஜை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவு விட கோரி தேன்மொழி தர்மபுரி குற்றவியல் நடுவர் நீதி மன்றம் என்-,2, ல் வழக்கு தொடர்ந்தார்.

08.11.2012ல் வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) ஜோதி, நாகராஜை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ பெருமாள் மற்றும் கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது  வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post