Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரியில் இருந்து 4.88 டி.எம்.சி., நீர் திறக்க உத்தரவு: இன்னும் 52.5 டி.எம்.சி., நீர் பாக்கி!

Cauvery Monitoring Committee ordered that Karnataka State Government
should open 4.88 tmc Cauvery water for Tamilnadu. 
காவிரியில் மேலும் 4.88 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக மாநில அரசுக்கு காவிரி கண்காணிப்புக்குழு நேற்று உத்தரவிட்டது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை என்று காரணம் கூறி தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடவில்லை.

நேற்று நடந்த கூட்டத்தில், நவம்பர் 16 முதல் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில், தமிழகத்திற்கு 8 டி.எம்.சி., தண்ணீர் திறக்கப்படவேண்டும் என தமிழகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை 40 சதவீதம் பொய்த்து, 60 சதவீத அளவுக்கே மழை பெய்துள்ளதாக கர்நாடகா தெரிவித்தது. இதையடுத்து, வறட்சி காலத்தில் நீர் பங்கீடு செய்யும் முறைப்படி8 டி.எம்.சி., தண்ணீரில் 60 சதவீதமான 4.8 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. தமிழகத்திற்கு மேலும் வர வேண்டிய 52.5 டி.எம்.சி., நீர் குறித்து கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
[vuukle-powerbar-top]

Recent Post