Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஊழல் புகார்: வால் மார்ட்டின் ஐந்து இந்திய அதிகாரிகள் இடைநீக்கம்!

இந்திய வால்மார்ட் நிறுவனத்தின் ஊழல்!
அமெரிக்க வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, வெளிநாடுகளில் வர்த்தகத்தைத் துவக்கவோ அல்லது இருக்கும் வர்த்தகத்தை தக்கவைத்துக் கொள்ளவோ லஞ்சம் கொடு்ப்பது குற்றமாகும்.

தற்போது, அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான வால்-மார்ட், இந்தியாவில், பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக மொத்த வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், ஊழல் புகார் தொடர்பாக, இந்திய நிறுவனத்தில் பணியாற்றும் ஐந்து பேரை இடைநீக்கம் செய்திருக்கிறது.

அவர்கள் மீதான விசாரணை முடியும் வரை இந்த இடை நீக்கம் தொடரும் என்று தெரியவந்துள்ளது.அந்த சட்டம் மீறப்பட்டிருக்கிறதா என்ற விசாரணை நடந்து வருவதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

தற்போது வால்மார்ட் கால் பதித்துள்ள பிரேசில், சீனா, மெக்ஸிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஊழல் புகார்கள் காரணமாக, இந்தியாவில் வால்-மார்ட் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் பாதிக்கப்பட மாட்டாது என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது, பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வால்-மார்ட், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது சில்லறை வர்த்தக விற்பனையகங்களை நேரடியாகத் துவக்க இருப்பது குறிப்படத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post